Ad Code

யோசே (பர்னபா / யுஸ்து) • Joses (Barnabas / Justus) Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 52
யோசே: பொறுப்பு இல்லாவிட்டாலும் சேவை செய்வோம்

1. பெயர்: யோசே (பர்னபா / யுஸ்து) • Joses (Barnabas / Justus)

2. அர்த்தம்: 
பர்னபா - ஆறுதலின் மகன்
யுஸ்து Justus - நீதியுள்ளவர்

3. சிறுகுறிப்பு: 
• பர்னபா ஒரு லேவியரும், சீப்புரு தீவைச் சேர்ந்தவருமான ஒரு சீடர்.
• இயேசுவின் ஊழியக்காலத்தில் ஆரம்பம் முதல் உயிர்த்தெழுதல் வரை சீடர்களோடு இருந்த மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். 
• எழுபது சீடர்களில் ஒருவர் மற்றும் ஏழு உதவிக்காரர்களில் ஒருவர்.
• இவர் தன் நிலத்தை விற்று, அதற்குக் கிடைத்த பணத்தை அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைக்கும் அளவிற்குத் தாராள குணம் கொண்டவர். 
• சவுல் (பவுல்) மனமாற்றம் அடைந்தபோது, மற்றவர்கள் அவரை நம்பத் தயங்கிய நிலையில், அவரை அப்போஸ்தலர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் இவரே.
• சவுல் மற்றும் மாற்கு யோவான் ஆகியோருடன் இணைந்து நற்செய்திப் பணியில் ஈடுபட்டவர்.
• பர்னபா பன்னிருவரில் ஒருவராக இல்லாவிட்டாலும், அவர் ஒரு "அப்போஸ்தலர்" (தூதுவர்) என்றே வேதாகமத்தில் அழைக்கப்படுகிறார் (அப்போஸ்தலர் 14:14).

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பர்னபா பன்னிருவரில் ஒருவராக இல்லாவிட்டாலும், தன் ஊழிய சேவையில் பின்வாங்காமல், இன்னும் உற்சாகமாய், வைராக்கியமாக செயல்பட்டார். தனது அந்தஸ்தை விட, ஊழியத்தின் வளர்ச்சிக்கே அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பன்னிரு அப்போஸ்தலர்கள் பட்டியலில் பெயரைக் காணவில்லை என்றாலும், யோசே தொடர்ந்து அப்போஸ்தலர்களோடு இணைந்து நம்பிக்கையுள்ள ஒரு சீடராகவே வாழ்ந்தார்..

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
அப்போஸ்தலர் 1:21-26
 4:36-37; 
9:26-27; 11:22-26

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments