Ad Code

யோசேப்பு • Joseph of Arimathea • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 39
யோசேப்பு: இடங்கொடுப்போம் (நற்கிரியை செய்தல்)

1. பெயர்: யோசேப்பு • Joseph of Arimathea

2. அர்த்தம்: 
அவர் பெருகப்பண்ணுவார்

3. சிறுகுறிப்பு: 
• இவர் யூதர்களின் ஆலோசனை சங்கத்தில் ஒரு கனம்பொருந்திய ஆலோசனைக்காரராகவும், செல்வந்தராகவும் இருந்தார்.
• இயேசுவின் சீஷர்களில் ஒருவராக இருந்தபோதிலும், யூதர்களுக்குப் பயந்ததினால் அதை அந்தரங்கமாய் (ரகசியமாய்) வைத்திருந்தார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசுவின் மரணத்திற்குப் பின்பு, சூழ்நிலைகள் சாதகமற்று இருந்தபோதும், மற்றவர்கள் பின்வாங்கிய நேரத்திலும், யோசேப்பு தன் செல்வாக்கையும் தகுதியையும் இறை காரியத்திற்காகத் துணிச்சலோடு பயன்படுத்தி, பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டுப் பெற்றார். தான் வெட்டியிருந்த புதிய கல்லறையில் இயேசுவின் சரீரத்தைத் துணிகளில்சுற்றி, நற்கிரியை செய்து, அடக்கம் பண்ணினார்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 27: 57-60
மாற்கு 15: 42-46
லூக்கா 23: 50-53
யோவான் 19: 38-42

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments