சிறுவயதிலேயே தன் தாயின் சொற்கேட்டு கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடந்து தன் 18 ஆவது வயதில் வாழ்க்கையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தார்கள். வாலிப வயதில் அருமையாக வயலின் வாசிக்கும் நாட்களில் காது கேட்காமல் போனது.
கர்த்தரிடம், எனக்குக் காது கேட்கும்படி செய்தால் நான் என் நகைகளைக் கழற்றி விடுவேன், என்று பொருத்தனை பண்ணினார்கள்.
கர்த்தர் வசனத்தின் மூலம் அவர்களோடு பேசினார். "காட்டு புஷ்பங்களை உடுத்தி வைத்து அழகு பார்க்கும் நான் என் மகளாகிய உன்னை அழகாக பார்க்க மாட்டேனா!" அதனால் அவர்கள் நகையைக் கழற்றவில்லை, காதும் ஒழுங்காக கேட்க ஆரம்பித்தது.
வாழ்க்கையைக் கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்ததினால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அவர்கள் 27.06.1978 முதல் சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி 31.05.1986இல் ஓய்வு பெற்றார்கள். தன் சொந்த சகோதரி திருமதி லில்லி ஃப்ளோரா எபநேசர் அவர்களுடன் சாந்தி நகரில் வாழ்ந்து தன்னுடைய 68 ஆம் வயதில் உடல் நலக்குறைவால் 23.09.1996 ஆம் நாள் கர்த்தருடைய ராஜ்யத்தில் சேர்ந்தார்கள். தன் இறப்பு தேதியை குடும்பத்தினரிடம் முன்னதாக சொல்லிவிட்டார்கள். மூன்றாவது நாள் ஞாபகார்த்த ஆராதனையில் யாரெல்லாம் வருவார்கள் என்றும் முன்னறிவித்தார்கள்.
அன்பு, இரக்கம், படிப்புக்கு உதவி, பிரார்த்தனை போன்ற நற்பண்புகளைக் கொண்ட Miss Glory Thomas தனது தாயாரின் நினைவாக, நற்போதகம் இதழில் ஒவ்வொரு மாதமும் ஒரு வேத வினா போட்டியை நடத்துவதற்காக, திருநெல்வேலி பேராயரிடம் ஒரு அறக்கட்டளை நிதியை (Endowment Fund) வழங்கினார்கள். அதனால்தான் அந்தப் போட்டிக்கு அவரது தாயாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

0 Comments