Ad Code

நிக்கானோர் • Nicanor • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 62
 நிக்கானோர்: சமூகப் பணியில் தொடங்கிய ஊழியம்

1. பெயர்: நிக்கானோர் • Nicanor

2. அர்த்தம்: 
வெற்றி கொள்பவன் 

3. சிறுகுறிப்பு: 
• இயேசு கிறிஸ்து சுவிசேஷம் அறிவிக்க அனுப்பிய 72 சீடர்களின் (லூக்கா 10:1) குழுவில் நிக்கானோரும் ஒருவராக இருந்ததாக மரபு கூறுகிறது.
• அப்போஸ்தலர்களால் பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்தவர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு உதவிக்காரர்களில் (Deacons) நிக்கானோரும் ஒருவர்.
• நிக்கானோர் சைப்ரஸ் தீவுக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.
• பின்னர் இவர் சைப்ரஸ் பகுதியிலுள்ள போலிஸ் (Polis) நகரின் பிஷப்பாகப் (ஆயராக) பணியாற்றியதாகக் கருதப்படுகிறது.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஆதி திருச்சபையில் நிக்கானோர் உட்பட ஏழு உதவிக்காரர்களின் பொறுப்பு "பந்திவிசாரணை" (Social Service & Relief Work) என்னும் எளிய சமூகப் பணியாகவே தொடங்கியது.உணவுப் பங்கீடு போன்ற எளிய சமூகச் சேவைதானே என்று திருச்சபை அவர் சுலபமாக எண்ணவில்லை. சமூகப் பணியை நேர்மையாகவும், பட்சபாதமின்றியும் செய்ய ஆவிக்குரிய முதிர்ச்சி அவசியம் என்பதை நிக்கானோரின் நியமனம் காட்டுகிறது.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
அப்போஸ்தலர் 6:1-6

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments