Ad Code

உணவு உண்பதற்கான விவிலியக் வழிகாட்டுதல்கள் (1 கொரிந்தியர் 10:27-31) Biblical Guidelines for Eating Food

உணவு உண்பதற்கான விவிலியக் வழிகாட்டுதல்கள் (1 கொரிந்தியர் 10:27-31)

உதாரணம்
நீங்கள் ஒரு உணவகத்திற்கோ அல்லது பிற மத நண்பரின் வீட்டிற்கோ விருந்துக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு பலவகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன.

சுதந்திரத்துடன் உண்பது:
அங்குள்ள உணவு இறைவனால் படைக்கப்பட்டது என்ற எண்ணத்தோடு, எந்தவித மனஉறுத்தலும் இன்றி, இறைவனுக்கு நன்றி செலுத்தி நீங்கள் அதைச் சாப்பிடலாம்.

பிறருக்காகத் தவிர்ப்பது:
அப்போது, உங்களுடன் இருக்கும் இன்னொரு நண்பர், "இந்த உணவு விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டது, இதைச் சாப்பிடுவது தவறு" என்று கருதித் தயங்குகிறார் அல்லது பலவீனமான மனச்சாட்சியோடு இருக்கிறார். உங்களுடைய செயலால் அந்த நண்பரின் மனச்சாட்சி காயப்படக்கூடாது அல்லது அவருடைய விசுவாசம் பலவீனமடையக் கூடாது என்பதற்காக, அந்த உணவைத் தவிர்த்துவிட வேண்டும்.


1. எப்போது சாப்பிடலாம்?

• அன்போடு வழங்கப்படும் போது: 
ஒருவர் நமக்கு அன்போடு உணவளிக்கும் போது, அதை மனப்பூர்வமாகவும் நன்றியுணர்வோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

• நன்றியறிதலோடு உண்ணும் போது: 
கடவுள் அளித்த உணவிற்காக அவருக்கு நன்றி செலுத்தி, எந்தவித மனஉறுத்தலும் இன்றி உணவை உட்கொள்ளலாம்.

2. எப்போது சாப்பிடக் கூடாது?

• விக்கிரக படைப்பு என்று அறியப்படும் போது: 
ஒரு உணவு விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டது (பூஜை செய்யப்பட்டது) என்று அவர்களே சொல்லி தரும் போது, அது தெளிவாகத் தெரியவந்தால், அதை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.


• பிறருடைய மனச்சாட்சிக்குத் தடையாகும் போது: 
விக்கிரகப் படைப்பை உண்பது மற்றவர்களின் விசுவாசத்திற்கு அல்லது மனச்சாட்சிக்கு இடறலாக இருக்கும் என்றால், அதை விலக்கிக்கொள்ள வேண்டும்.

3. ஏன்? 
• விக்கிரத்திற்கு படைக்கப்பட்ட உணவை என்பதால் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. 

• உணவினால் எந்தப் பாதிப்பும் இல்லை, அது இறைவனால் அளிக்கப்பட்டதே.

• ஆனால், சக மனிதருடைய விசுவாசத்திற்கு இடறலாகவோ, அவர்களின் மனச்சாட்சிக்குத் தடையாகவும் இருந்தால், அந்த உணவைத் தவிர்ப்பதே உண்மையான அன்பின் அடையாளமாகும்.

Post a Comment

0 Comments