சுதந்திர / குடியரசு தின விழா முறைமை
1. முகவுரை வசனம்
"ஆண்டவர் நமக்கு வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்; அதனால் நாம் மகிழ்ச்சியடைகிறோம்" (சங்கீதம் 126:3).
2. ஆரம்ப ஜெபம்
அரசாளும் அன்பின் தந்தையே, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட சுதந்திர / குடியரசு தின விழாவிற்காக உம்மைத் துதிக்கிறோம். எங்கள் தாய்நாடான இந்திய தேசத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். உம்முடைய பிரசன்னமும் ஆசீர்வதிக்கப்பட்ட வழிநடத்துதலும் எங்களோடு இருக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.
3. பாடல்
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா!
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
சாந்தி இதற்கிலை ஈடே,
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!
உழவெழத் தொழிலெழ
உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யா மொழி மாகாணத்தலைவர்புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்பணிவிடை நேர்மை அருளே,
பரனர செனப்பகர் தெருளே,
பாரதம் போற்ற மெய்ப் பொருளே!
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே!ஜெய,
ஜெய, ஜெய, ஜெயமே!
4. அறிமுக உரை
இன்று நம் தாய்நாடான இந்தியாவின் [சுதந்திர / குடியரசு] தினத்தை, நம் ஆலய வளாகத்தில் ஒன்று கூடிக் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம். இப்போது நாம் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்வோம்.
5. கொடியேற்றம்
(தேசியக் கொடி ஏற்றப்படும் தருணம்)
தேசியக் கொடியின் பெருமையையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து, கொடியேற்றி மரியாதை செலுத்துதல்.
6. தேசிய கீதம்
சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கே, செய கே, செய கே,
செய செய செய, செய கே.
7. உறுதி மொழி
இந்தியா என் நாடு, இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள். நான் என் நாட்டை நேசிக்கிறேன், அதன் வளமான மற்றும் பன்முகப் பாரம்பரியத்தைக் குறித்துப் பெருமிதம் கொள்கிறேன். நான் எப்போதும் அதற்குத் தகுதியானவனாக இருக்க முயற்சிப்பேன். நான் என் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பெரியவர்களுக்கும் மரியாதை கொடுப்பேன், அனைவரையும் மாியாைதையுடன் நடத்துவேன். என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் என் பக்தியை நான் உறுதியளிக்கிறேன். அவர்களின் நல்வாழ்விலும் செழிப்பிலும் மட்டுமே என் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
8. (கலை நிகழ்ச்சிகள் இருந்தால்)
(இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த கிறிஸ்தவர்கள் பற்றி பேசலாம்)
9. வேதபாடம்
சங்கீதம் 136: 21 - 26 (சுதந்திர தினம்)
1 பேதுரு 2. 13 - 17 (குடியரசு தினம்)
10. சிறப்புரை / வாழ்த்துச் செய்தி
11. நிறைவு ஜெபம்
12. ஆசீர்வாதம்
அனைத்தையும் ஆளுகை செய்யும் தந்தை, மைந்தர், தூய ஆவியாரகாகிய எல்லா வல்ல கடவுள், நம் மனதையும், வீட்டையும், நாட்டையும் இன்றும் என்றும் வழிநடத்துவராக. ஆமென்.
13. என் ஆத்துமாவே...
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. ஆமென்.
குறிப்பு:
கல்வி நிறுவனங்களில் தமிழ்த் தாய் வாழ்த்து வேண்டுமென்றால் அறிமுக உரைக்கு அடுத்து வைத்துக் கொள்ளலாம். கல்வி நிறுவனங்களில் ஆரம்பப் பாடல் தேவையில்லை.
It's prepared by Meyego

0 Comments