Ad Code

அகபு Agabu Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 62
அகபு: இறைவாக்கை உணர்தல்

1. பெயர்: அகபு Agabus

2. அர்த்தம்: 
அன்பானவர் / தகப்பனின் அன்பு (Father's love).

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
• புதிய ஏற்பாட்டில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எருசலேம் திருச்சபையின் தீர்க்கதரிசிகளில் அகபு மிக முக்கியமானவர்.
• அப்போஸ்தலர் 11:27-28: உலகம் முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்படும் என்று ஆவியானவரால் தீர்க்கதரிசனம் உரைத்தான் (இது கிளவுதியு ராயன் காலத்தில் நடந்தது).
• அப்போஸ்தலர் 21:10-11: பவுலின் கச்சையைக் கட்டி, எருசலேமில் பவுல் யூதர்களால் கட்டப்பட்டு புறஜாதியாரிடம் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• பாரம்பரிய வரலாற்றின்படி, இயேசு கிறிஸ்துவினால் அனுப்பப்பட்ட 70 சீடர்களில் இவரும் ஒருவர்
• அந்தியோகியாவிலும் எருசலேமிலும் நற்செய்திப் பணியாற்றி தியாகியாக (Martyr) மரித்தார் என்றும் கருதப்படுகிறது.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அகபு தேவ ஆவியானவரின் ஏவுதலைச் சரியாக உணர்ந்து, வரும் ஆபத்துகளை சபை எச்சரிக்கையாக இருக்க முன்னறிவித்தார். நாமும் ஆவியானவரின் உணர்த்துதல் மற்றும் வழிநடத்துதலுக்குச் செவிகொடுத்து, பிறரின் தேவைகளுக்கும் ஆபத்துகளுக்கும் கைகொடுக்கும் எச்சரிக்கையுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments