Ad Code

ஊசி கோபுரம் • CSI Cathedral Tower In CSI Diocese of Tirunelveli

தென்னிந்தியாவின், குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தின் கிறிஸ்தவ வரலாற்றில் பாளையங்கோட்டை 'தூய திரித்துவ பேராலய‌த்திற்கு' (Holy Trinity Cathedral) ஒரு மாபெரும் இடமுண்டு. இதன் ஆரம்பகால சரித்திரம் மிகவும் சுவாரஸ்யமானது!

1820-களில் 'நெல்லையின் அப்போஸ்தலன்' என்று அழைக்கப்படும் கனம் சார்லஸ் தியோபிலஸ் இவால்ட் ரேனியஸ் (Rev. C.T.E. Rhenius) ஐயரவர்கள் பாளையங்கோட்டையில் மிஷனரி பணிகளைத் தீவிரமாகச் செய்து வந்தார்.

அங்கு விசுவாசிகளுக்கென்று ஒரு பெரிய ஆலயத்தைக் கட்ட அவர் தீர்மானித்தார்.

மதநல்லிணக்கமும் நிலமும்:

இந்த ஆலயத்தின் கட்டுமானத்தில் ஒரு ஆச்சரியமான சரித்திரம் மறைந்துள்ளது!

ரேனியஸ் ஐயரின் நண்பரும் இந்து மதத்தைச் சேர்ந்தவருமான 'வெங்கு முதலியார்' என்ற வள்ளல், இந்த ஆலயம் கட்டப்படுவதற்காக பாளையங்கோட்டையின் முக்கியப் பகுதியில் நிலத்தை வழங்கினார்.

மேலும், இந்தக் கோவில் கட்டுமானப் பணிக்கான நிதியில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்களும் மனமுவந்து காணிக்கை கொடுத்தார்கள் என்பது மதநல்லிணக்கத்தின் மாபெரும் சாட்சி!

⛪ வெறும் 175 நாட்களில், அன்றைய மதிப்பில் சுமார் 2000 ரூபாய் செலவில் ஒரு அழகான ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது!

1826-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி இது திறக்கப்பட்டது.

பின்பு 1836 ஜனவரி 30-ல் பிஷப் டேனியல் கோரி (Bishop Daniel Corrie) அவர்களால் இதற்கு Holy Trinity Church என்று பெயரிடப்பட்டது.

தேவனுடைய ஆலயம் கட்டப்படும்போது, எந்தப் பாகுபாடும் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டது வேதாகமக் காலத்து ஒற்றுமையை நினைவூட்டுகிறது!

"சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?" (சங்கீதம் 133:1)

அன்று அன்பினாலும், பலரின் தியாகத்தினாலும், சாதி மத பேதமின்றிக் கட்டப்பட்ட இந்த ஆலயம் இன்று பலருக்கும் ஆசீர்வாதமாக நிற்கிறது. 

Post a Comment

0 Comments