Ad Code

தலித் மற்றும் ஆதிவாசி ஞாயிறு Dalit and Adivasi Sunday CSI

தென்னிந்திய திருச்சபையின் (CSI) தலித் மற்றும் ஆதிவாசி ஞாயிறு (Dalit and Adivasi Sunday) என்பது திருச்சபையிலும் சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மனித உரிமைகள், சமூக நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை வலியுறுத்துவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் சிறப்பு வழிபாட்டு நாளாகும்.

அனுசரிக்கப்படும் காலம்: இந்தியத் திருச்சபைகளின் தேசிய கவுன்சில் (NCCI) மற்றும் CSI Synod வழிகாட்டுதலின்படி, பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் (சர்வதேச பழங்குடி மக்கள் தினத்தை ஒட்டிய ஞாயிறு) இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 

சர்வதேச பழங்குடி மக்கள் தினம் (International Day of the World's Indigenous Peoples) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.

தென்னிந்திய திருச்சபை ஆகஸ்ட் இரண்டாம் / மூன்றாம் ஞாயிறு அன்று தலித் ஆதிவாசி ஞாயிறாக ஆசரிக்கிறது.

1950-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசியல் சாசன ஆணை, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தலித் மக்களுக்குப் பட்டியல் வகுப்பினர் (SC) அந்தஸ்தை மறுத்தது. இந்தத் பாகுபாட்டைக் கண்டிக்கும் வகையில், ஆகஸ்ட் 10-க்கு அருகாமையில் வரும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை 'தலித் ஞாயிறு' ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தென்னிந்திய திருச்சபையின் (CSI) கோட்பாடு மற்றும் தலித் இறையியலின் (Dalit Theology) படி, "தலித்" என்பது ஒரு சாதியப் பெயர் அல்ல; அது சாதியமைப்பால் "ஒடுக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, நசுக்கப்பட்ட" மக்களின் விடுதலையும் கண்ணியமும் சார்ந்த அடையாளமாகும்.


CSI Synod-ன் 'தலித் மற்றும் ஆதிவாசித் துறை' (Department of Dalit and Adivasi Concerns) வரையறைப்படி, தலித் என்ற அடையாளம் தாழ்வுமனப்பான்மையைக் குறிப்பதல்ல; மாறாக திருச்சபைக்குள்ளும் சமூகத்திலும் சாதிய பாகுபாடுகளை எதிர்த்துச் சமத்துவம், அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான விழிப்புணர்வின் அடையாளமாகும்.


Meyego 
9486 810 915


Post a Comment

0 Comments