இஸ்ரவேல் தேசத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் "பாலும் தேனும் ஓடுகிற தேசம்" என்ற தொடர், உண்மையில் பாலும் தேனும் ஆறாக ஓடுவதைக் குறிக்கவில்லை.
பால்:
பழைய ஏற்பாட்டின்படி பால் என்பது ஆட்டின் / பிற கால்நடைகளின் பாலைக் குறிக்கும். அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் இருந்ததால், அங்கிருந்து பெறப்பட்ட பாலும், பாலாடைக்கட்டி (Cheese), வெண்ணெய் போன்ற பால் பொருட்களும் மிகத் தாராளமாகக் கிடைத்தன.
தேன்:
• பேரிச்சை பழத்தில் இருந்து எடுக்கப்படும் அடர்த்தியான இனிப்பான சாறு சிலன் (Silan) என்ற ஈச்சந்தேன் (Date Honey).
• இஸ்ரவேலின் காடுகளிலும் மலைகளிலும் அதிக அளவில் கிடைக்கும் காட்டுத் தேன்
இன்றைய நிலை:
பசுக்களின் சராசரி பால் உற்பத்தியில் உலக அளவில் இஸ்ரவேல் முன்னணியில் உள்ளது. நவீன தேனீ வளர்ப்பு மற்றும் பழங்கள் உற்பத்தியிலும் சிறந்து விளங்கி, இத்தொடரை இன்றும் நிஜமாக்கி வருகிறது.
ஆகவே,
"பாலும் தேனும் ஓடுகிற தேசம்" என்ற தொடர், அந்நாட்டின் வளமையை குறிக்கும் ஒரு உருவகத் தொடர் (Metaphor) ஆகும்.

0 Comments