நிக்கொலா: பின்னணி அல்ல, தகுதியே முக்கியம்
1. பெயர்: நிக்கொலா • Nicolas
2. அர்த்தம்:
மக்களின் வெற்றியாளன்
3. சிறுகுறிப்பு:
• இவர் அந்தியோகியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பின்னணி கொண்டவர்;
• ஆரம்பத்தில் யூத மார்க்கத்திற்கு மாறியவராக (Proselyte) இருந்தார்.
• ஆதித் திருச்சபையில் ஏழு உதவிக்காரர்களில் (Deacons) ஒருவராக நியமிக்கப்பட்டார்.
• யூதரல்லாத, அந்தியோகியா தேசத்து பிறஜாதியார் பின்னணியில் இருந்து யூத மார்க்கத்திற்கு மாறிய ஒரே நபராவார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
கடவுளுடைய ஊழியத்திலும் திருச்சபையிலும் ஒருவருடைய பின்னணியோ, பாரம்பரியமோ தடையாக இருப்பதில்லை. உண்மையுள்ள மனமும், நற்சாட்சியும், பரிசுத்த ஆவியின் நிறைவும் இருந்ததால், ஒரு பிறஜாதியாரான நிக்கொலாவையும் கடவுள் தனது ஊழியத்தில் உயர்த்தினார்.
உத்தேச கருத்து
இந்த நிக்கொலாவ மதஸ்தர்கள் கிறிஸ்தவச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, விக்கிரகப் படைப்புகளை உண்பதையும், சரீரத்தின் விருப்பங்களுக்கு இணங்குவதையும் தவறில்லை எனப் போதித்தனர். இதை எபேசு மற்றும் பெர்கமு சபைகளுக்கு எழுதிய நிருபங்களில் வன்மையாகக் கண்டித்தார். (இவர் தான் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை)
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 6.5
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments