பர்மெனா: நிலைத்திருத்தல்
1. பெயர்:
பர்மெனா • Parmenas
2. அர்த்தம்:
நிலையானவர்
3. சிறுகுறிப்பு:
• ஆதித் திருச்சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு உதவிக்காரர்களில் (Deacons) பர்மெனாவும் ஒருவர்.
• இவர் நற்சாட்சி பெற்றவராயும், விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவராயும் இருந்தார்.
• பர்மெனா என்ற பெயர் கிரேக்க மொழிப் பின்னணி கொண்டது. இவர் எருசலேமில் வாழ்ந்த யூத-கிரேக்க (Hellenistic Jew) சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கக் கூடும்.
• பாரம்பரியத்தின்படி, பர்மெனா பிலிப்பி (Philippi) அல்லது சொலோனியா (Soloni) பகுதிக்கு ஆயராகப் (Bishop) பணியாற்றி, தனது சுவிசேஷ ஊழியத்தில் உண்மையுள்ளவராக நிலைத்திருந்து, இறுதியில் கிறிஸ்துவுக்காகத் தியாகியாக (Martyr) உயிர்துறந்தார்
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சபை ஊழியத்தில் சிறிய வேலை, பெரிய வேலை என்ற பாகுபாடு இல்லை. மேசைகளில் பந்தி பரிமாறும் பணிவிடையாக இருந்தாலும், அதை ஆவியோடும் ஞானத்தோடும் உண்மைத்துவத்துடனும் செய்ய வேண்டும். நமது பணியில் நாம் உறுதியாகவும் நிலையாகவும் (Parmenas) நிலைத்திருக்க வேண்டும் என்பதை இவரது வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 6.5
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments