தீமோன்: பட்சபாதமற்ற அன்பு
1. பெயர்: தீமோன் Timon
2. அர்த்தம்:
கனம்பண்ணுகிறவன்
3. சிறுகுறிப்பு:
• தீமோன் இயேசு கிறிஸ்துவால் சுவிசேஷம் அறிவிக்க அனுப்பப்பட்ட 70 சீஷர்களில் ஒருவராக இருந்தார்
• ஆதித் திருச்சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு உதவிக்காரர்களில் (Deacons) தீமோனும் ஒருவர்.
• இவர் நற்சாட்சி பெற்றவராகவும், பரிசுத்த ஆவியினாலும் ஞானத்தினாலும் நிறைந்தவராகவும் இருந்தார்.
• அரேபிய பகுதியில் போஸ்ரா (Bostra / Bosphorus) எனும் நகரத்தின் முதல் ஆயராக (Bishop) நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.
• இறுதியில் கைது செய்யப்பட்டு, நெருப்பில் வீசப்பட்டார். இருப்பினும் அற்புதமாக தீயிலிருந்து தப்பிய அவர், இறுதியாகச் சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாக (Martyr) மரித்தார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
எருசலேம் திருச்சபையில் எபிரெய பாஷை பேசுகிறவர்களுக்கும் கிரேக்க பாஷை பேசுகிறவர்களுக்கும் இடையே உணவுப் பங்கீட்டில் சலசலப்பு வந்தபோதே தீமோன் நியமிக்கப்பட்டார். எவ்விதப் பட்சபாதமும் இன்றி அனைவருக்கும் அன்போடு ஊழியஞ்செய்த தீமோனைப் போல, நாமும் சமூக பாகுபாடுகளைக் கடந்து அனைவரிடமும் அன்பு செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 6.5
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments