திருமறையில் யார் இவர் யாரோ? - 107
தெர்த்துல்லு: நாவன்மையை விட சத்தியமே வெல்லும்
1. பெயர்:
தெர்த்துல்லு • Tertullus
2. அர்த்தம்:
"மூன்றாம்" அல்லது "மூன்றாவது" (Third / Triple - 'தெர்த்தியு' எனும் லத்தீன் பெயரின் சுருக்க வடிவம்)
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 24:1-2 – பிரதான ஆசாரியனாகிய அனனியாவும் மூப்பர்களும் தெர்த்துல்லு என்ற வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு, ஆளுநர் பேலிக்சினிடத்தில் பவுலுக்கு விரோதமாக வழக்குத் தொடருதல்.
அப்போஸ்தலர் 24:2-8 – தெர்த்துல்லு ஆளுநரான பேலிக்சை இச்சக வார்த்தைகளால் புகழ்ந்து பேசி, பவுலின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துதல் (உலகெங்கும் கலகத்தை உண்டாக்குகிறவன், நசரேய மார்க்கத்தின் தலைவன், தேவாலயத்தை அசுசிப்படுத்த முயன்றவன்).
4. வரலாற்றுக் குறிப்புகள்
• ரோம வழக்கறிஞர்: இவர் ரோமச் சட்டமுறைகளையும், கிரேக்க-ரோம வழக்காடைப் பேச்சாற்றலையும் (Rhetoric) நன்கு அறிந்த ஒரு வழக்கறிஞர் / பேச்சாளர் (Lawyer / Orator).
• யூத தலைவர்களின் தந்திரம்: யூதர்களின் சனகெத்ரின் சங்கம், ரோம நீதிமன்றத்தில் தங்கள் வழக்கைச் சட்டப்பூர்வமாகவும் தங்களுக்குச் சாதகமாகவும் எடுத்துரைக்கத் திறமையான தெர்த்துல்லுவை வாடகைக்கு அமர்த்தியது.
• பொய் புகழ்ச்சி (Flattery): பேலிக்ஸ் அதிபர் கொடூரமானவராகவும், லஞ்ச குணமுடையவராகவும் இருந்தபோதிலும், வழக்கில் வெற்றி பெறுவதற்காக "உம்மால் நாங்கள் மிகுந்த சமாதானத்தை அநுபவிக்கிறோம்" என்று தெர்த்துல்லு அவரைப் பொய்யாகப் புகழ்ந்தார்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தெர்த்துல்லு தனது புத்திசாலித்தனமான பேச்சினாலும், இச்சக வார்த்தைகளினாலும் பொய்யை உண்மையைப் போலச் சோடிக்க முயன்றார். ஆனால், பவுல் எவ்வித ஆடம்பரமும் இன்றி உண்மையைத் தெளிவாகப் பேசித் தன்னை நியாயப்படுத்தினார். உலகச் சொல்லாற்றலை விட இறைவனுடைய சத்தியமே எப்போதும் வல்லமையுள்ளது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments