Ad Code

Why World Misunderstand Brotherhood? சகோதரத்துவம் எப்படிப்பட்டது?

இரத்த பந்தம் இல்லாத ஒருவரை "அண்ணன்" என்றோ "தம்பி" என்றோ மனதார அழைக்கும்போது அங்கே ஒரு மிகப்பெரிய பலம் கிடைக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய உலகம் இந்த ஆழமான பிணைப்பை ஏதோ ஒரு லென்ஸு வைத்து சந்தேகத்தோடுதான் பார்க்கிறது. ஏன் இந்த அழகான உறவை உலகம் தப்பாப் பார்க்குது?

1. சமூக வலைத்தள கண்ணோட்டம் (Social Media)
இன்னைக்கு நாம வாழ்றதே ஆன்லைன்ல தான். ரெண்டு பேரு ரொம்ப நெருக்கமா ஒரு போட்டோ போட்டா, "இவங்களுக்குள்ள ஏதோ இருக்கு"னு கமெண்ட் பண்றதுதான் இப்போ ட்ரெண்ட். ஆரோக்கியமான நட்பைக்கூட ஒரு 'கிசுகிசு' ரேஞ்சுக்கு கொண்டு போய் நிறுத்திடுறாங்க. இந்த டிஜிட்டல் உலகம் எதையும் மேலோட்டமா பார்க்கத்தான் கத்துக்கொடுத்திருக்கே தவிர, ஆழமான சகோதரத்துவத்தை மதிக்கத் தவறிடுச்சு.

2. தனிமனிதவாதம் (Individulaism)
முன்னாடி எல்லாம் ஊரே ஒரு குடும்பமா இருந்துச்சு. ஆனா இப்போ, "நான், என் வளர்ச்சி, என் தேவை"னு எல்லாரும் தனித்தனியா ஓடிக்கிட்டு இருக்கோம். அதனால, ஒருத்தர் இன்னொருத்தர் மேல அக்கறை காட்டினா, "இவன் ஏன் இவ்வளவு பண்றான்? கண்டிப்பா ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கும்"னு ஒரு வியாபார நோக்கத்தோடயே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. தூய்மையான அன்பை விட, 'லாபம்' தான் இன்னைக்கு தீர்மானிக்குது.

3. உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் குறையும் அபாயம் 
குறிப்பா ஆண்களுக்குள்ள இருக்குற அந்த "Bro-Bonding" இன்னைக்கு ரொம்பவே தப்பாச் சித்தரிக்கப்படுது. ஒருத்தர் மேல இருக்குற பாசத்தை (Brotherly Care) வெளிப்படுத்துறது ஆணுக்கே உரிய கெத்து. தன் நண்பன் கிட்டயோ, கூடப்பிறவா அண்ணன்/ தம்பி கிட்டயோ அன்பைக் காட்டினா, அதை 'பலவீனம்'னு சமூகம் முத்திரை குத்துது. உண்மையில, அன்பை வெளிப்படுத்துறதுதான் ஒரு ஆணை முழுமையான மனிதனாக்கும் என்பது மறக்கப்படுது.

4. முன் முடிவுகள் (Setrotypes)
தனிபட்ட ஆலோசனைகள் (Counseling) வழங்குவதை சமூகம் தவறாகப் பார்க்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் அறியாமை தான் காரணம். தன் தவறை மறைக்க, திரித்துக் கூறுவோரும் உண்டு. ஆலோசனை ஆரோக்கியமானதாகவும் (Healthy), தெளிவானதாகவும் (Transparent), அறிவியல் பூர்வமானதாகவும் (Scientific) இருக்கும் வரை, உங்களைக் குறைகூறுபவர்கள் ஒரு கட்டத்தில் தங்கள் அறியாமையை (முன்முடிவுகள்) உணர்ந்து வெட்கப்படுவார்கள்.

5. திரைத்துறை தாக்கம் (Cinema)
அந்த 'சினிமா' பாதிப்பும் தாக்கம் ஏற்படுத்தியது. சினிமாலயும், சீரியல்லயும் ஒரு நெருக்கமான நட்பை சரியா காட்ட மாட்டேங்குறாங்க. ஒண்ணு அந்த நட்புல துரோகம் இருக்கணும், இல்லன்னா அதுக்கு வேற ஒரு அர்த்தம் கொடுக்கணும். இதையே பார்த்து வளர்ற இளைய தலைமுறை, நிஜ வாழ்க்கையிலயும் அதே கண்ணாடியைப் போட்டு மத்தவங்களைப் பார்க்குறாங்க.

நாம் மாற்ற வேண்டிய பார்வை:
இந்த உறவை வெறும் பிணைப்புனு மட்டும் சொல்லாம, இத ஒரு சகோதரத்துவம்னு (Brotherly Guide) பார்க்கலாம். ரத்த பந்தம் இல்லைனாலும், ஒருத்தரை சரியான பாதையில வழிநடத்துறது, அவர் விழுறப்போ தாங்கிப் பிடிக்கிறது இருக்கு பாருங்க... அதுதான் உண்மையான சகோதரத்துவம்.

யார் என்ன சொன்னாலும், ஒரு கஷ்டம்னு வரும்போது தோள் கொடுக்க ஒரு 'உடன் பிறவா சகோதரன்' இருந்தா, அந்த வாழ்க்கை ரொம்பவே தைரியமானது. உலகம் பேசுறதை விட்டுட்டு, அந்தப் பிணைப்பை மதிக்கக் கத்துக்கிட்டா வாழ்க்கை இன்னும் அழகா இருக்கும்.

மேயேகோ +

Post a Comment

0 Comments