எல்லாருக்கும் எல்லாமாகுதல் – 1 கொரிந்தியர் 9:22
சுவிசேஷத்தைப் பரப்புவதற்காகப் பவுல் பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் பின்புலம் கொண்ட மக்களைச் சந்தித்தார். யூதர்கள், கிரேக்கர்கள், பலவீனமானவர்கள் என ஒவ்வொருவரையும் அணுக அவர் கையாண்ட உத்தியை இங்கே விளக்குகிறார். "பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்" என்கிறார். இது தன் கொள்கைகளை விட்டுக்கொடுப்பது அல்ல, மாறாக மற்றவர்களின் நிலையில் இருந்து அவர்களைப் புரிந்துகொள்வது. அன்பு மற்றும் சுவிசேஷத்தின் பொருட்டுத் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பவுல் ஓரங்கட்டினார்.
1. மற்றவர்களோடு பழகும் போது நான் என் பிடிவாதத்தையே முன்னிறுத்துகிறேனா அல்லது அவர்களின் சூழலைப் புரிந்து கொள்கிறேனா?
2. ஒருவரை நல்வழிப்படுத்த என் கௌரவத்தை விட்டுக்கொடுக்க நான் தயாரா?
3. என்னைப் பிடிக்காதவர்களிடமும் நான் "எல்லாருக்கும் எல்லாமாக" இருக்க முடிகிறதா?
மற்றவர்களைக் கிறிஸ்துவுக்காக கவர்ந்து கொள்ள வேண்டுமானால், நம்முடைய மேட்டிமையைக் கைவிட்டு அவர்கள் தளத்திற்கு இறங்கி வர வேண்டும். ஒரு நல்ல உறவை உருவாக்கத் தேவைப்படுவது அதிகாரம் அல்ல, பச்சாதாபம் (Empathy). வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களுடன் இணைந்து வாழவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் இந்த சரியான நெகிழ்வுத்தன்மை மிக அவசியம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
LLessons from Paul's Life Journey
Acknowledgement
Meyego

0 Comments