Ad Code

உலகப் பெற்றோர் தினம் • Global Day of Parents

உலகப் பெற்றோர் தினம் (Global Day of Parents) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தன் குழந்தைகளுக்காக வாழ்நாள் முழுவதும் தியாகங்களையும், தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் வழங்கும் அனைத்து பெற்றோர்களையும் பாராட்டி கௌரவிப்பதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1980-களில் இருந்தே ஐக்கிய நாடுகள் சபை குடும்பம் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாகவே பெற்றோர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்தத் தனித்துவமான நாள் உருவாக்கப்பட்டது

கடந்த 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UN General Assembly) ஜூன் 1 ஆம் தேதியை உலகப் பெற்றோர் தினமாக அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தியது. 

பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகப் பெற்றோர் படும் பாட்டையும், அவர்களின் வாழ்நாள் தியாகங்களையும் நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் வாய்ப்பை இத்தினம் வழங்குகிறது.

Post a Comment

0 Comments