1. ஞாயிறு குறிப்புகள்:
பெந்தெகொஸ்தே திருநாளுக்கு பின்வரும் 9 ம் ஞாயிறு
தேதி: 26.07.2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு:
II இராஜாக்கள் 5:1-14
நிருப வாக்கியம்: எபேசியர் 6:1-8
நற்செய்தி பகுதி: லூக்கா 2:47
2. திருவசனம்
தலைப்பு: சிறுவர்கள் சிறப்பானவர்கள்
லூக்கா 2:47
பவர் திருப்புதல்
அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
திருவிவிலியம்
அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
திருநெல்வேலி பேராயம் பாலர் ஞாயிறு
4. வசன குறிப்புகள்
4.1 ஆசிரியர்
லூக்கா நற்செய்தியின் ஆசிரியர் லூக்கா ஆவார். இவர் ஒரு மருத்துவராகவும், பவுலின் ஊழியத் தோழராகவும் அறியப்படுகிறார். அவர் இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தை வரலாற்று முறையிலும் ஒழுங்காகவும் பதிவு செய்திருக்கிறார்.
4.2 அவையோர்
எருசலேம் ஆலயத்தில் இருந்த போதகர்கள் மற்றும் சட்ட அறிஞர்கள்.
4.3. வசன பின்னணி
லூக்கா 2:41-52 பகுதியில் இயேசுவின் பன்னிரண்டு வயது நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் அவரை எருசலேமிற்கு அழைத்துச் சென்றனர். பண்டிகை முடிந்து திரும்பும்போது, இயேசு தங்களோடு வரவில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாட்கள் தேடி அலைந்தனர். இறுதியாக, அவர்கள் இயேசுவை எருசலேம் ஆலயத்தில் யூத மதப் போதகர்களுக்கு (ரபிகள்) நடுவில் அமர்ந்திருப்பதைக் கண்டனர்.
5. திருவசன விளக்கவுரை
இந்த ஒரு வசனம் இயேசுவின் ஞானம், அறிவு மற்றும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
1. வியக்க வைத்த ஞானம்:
12 வயதிலேயே இயேசு வேதத்தை ஆழமாகப் புரிந்துகொண்டிருந்தார். அவருடைய அறிவு வெறும் மனப்பாட அறிவாக இல்லாமல், ஆன்மீகப் புரிதலுடன் கூடியதாக இருந்தது.
2. வியக்க வைத்த பதில்கள்:
அக்காலத்தில் ரபிகள் கேள்வி–பதில் முறையில் வேதத்தை விவாதித்தனர். இயேசுவின் கேள்விகளையும் பதில்களையும் கேட்டவர்கள் அவருடைய ஆழமான ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
3. ஆழமான ஆச்சரியம்:
அவருடைய ஞானமும் பதில்களும் கேட்ட அனைவரையும் மிகவும் வியப்பில் ஆழ்த்தின. ஒரு சிறுவனிடம் இத்தகைய ஆழமான ஞானம் இருப்பது அவர்களுக்கு எதிர்பாராததாக இருந்தது.
4. தெய்வீக ஞானத்தின் வெளிப்பாடு:
இயேசுவின் சிறுவயதிலேயே வெளிப்பட்ட இந்த ஞானம், அவர் சாதாரண மனிதர் மட்டுமல்ல; தேவனுடைய குமாரனாகிய அவரில் தேவ ஞானம் வெளிப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
6. இறையியல் & வாழ்வியல்
தேவவார்த்தையின் முக்கியத்துவம்: சிறுவயதிலிருந்தே இயேசு ஆலயத்தையும் தேவவார்த்தையையும் நேசித்தார். நாமும் பிள்ளைகளில் இறைவார்த்தை மீதான வாஞ்சையை வளர்க்க வேண்டும்.
தாழ்மையான ஞானம்: ஞானமுள்ளவராக இருந்தும், இயேசு தாழ்மையுடன் கேட்டு, கேள்விகள் கேட்டு கற்றுக்கொண்டார்.
7. அருளுரை குறிப்புகள்
1. Have Discussion with Children
(Explain vs Discussion)
2. Make them Understanding
(Not only memorize)
3 Accept the Views of Children
(Not Age Discrimination)
Mr. Immanuel
Catechist,

0 Comments