Ad Code

அனனியா (சப்பீரா கணவர்) • Ananias Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 55
அனனியா: கடவுளை ஏமாற்ற முடியாது 

1. பெயர்: அனனியா (சப்பீரா கணவர்) • Ananias

2. அர்த்தம்: 
யெகோவா தயவுசெய்தார்

3. சிறுகுறிப்பு: 
ஆதி திருச்சபையின் தொடக்க காலத்தில் எருசலேமில் வாழ்ந்த விசுவாசி.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தன் மனைவியான சப்பீராவுடன் சேர்ந்து, தனக்குச் சொந்தமான நிலத்தை விற்று, அப்பொழுது கிடைத்த விலையில் ஒரு பகுதியை மட்டும் மறைத்து வைத்துவிட்டு, முழுத்தொகையும் இதுதான் என்று கூறி அப்போஸ்தலர்களிடம் கொண்டுவந்து வைத்தார்.
தன் மனைவியுடன்கூட பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பொய் சொல்லி, கர்த்தரைப் பரிசோதித்ததால், பேதுரு அப்போஸ்தலன் அவரைக் கண்டித்த உடனே கடவுளால் தண்டிக்கப்பட்டு அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்து மாண்டு போனார். மனிதர்களை ஏமாற்றலாம் என்று நினைத்து பொய் சொன்னாலும், இருதயத்தை ஆராய்ந்து அறிகிற கடவுளை எவராலும் ஏமாற்ற முடியாது.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
அப்போஸ்தலர் நடநடிகள் 5: 1 - 11

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments