டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் மாணவர்கள் இணைந்து கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடத்திய சலோ சன்சாத் (நாடாளுமன்றத்தை நோக்கி செல்வோம்) பேரணியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கைது நடவடிக்கைகள் அப்பகுதியில் கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன.
இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிரான ஒரு எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது. ஜனநாயக முறையில் போராடும் மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது அரசின் பலவீனமான செயல்பாட்டையே காட்டுகிறது.
வங்கதேச மாணவப் புரட்சியின் வரலாற்றை ஆட்சியாளர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
போராடும் மாணவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்!
> ஜெபத்துடன்...
மேயேகோ+

0 Comments