திரித்துவக் கடவுளின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள்.
அன்று சிறிய ஆலயமாக உருவெடுத்து, இன்று பேராலயமாக உயர்ந்து நிற்கிறது என்றால், அது எல்லாம் வல்ல ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பேரருளே ஆகும். நம் நெல்லை மண்ணில் கனம் ரேனியஸ் ஐயா அவர்கள் விதைத்த விதை, பல திருத்தொண்டர்களின் நீர்ப்பாய்ச்சலால் இன்று பேரூற்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. கடந்த இருநூறு ஆண்டுகளாக இவ்விளைச்சலை நமக்குத் தந்தருளிய இறைவனுக்கு நன்றி கூற நாம் அழைக்கப்படுகிறோம். இந்த நன்றியறிதலோடு, விசுவாசத் திருத்தொண்டர்களின் வழியில் தொடர்ந்து நாம் நீர்ப்பாய்ச்ச, வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாண்டில் உறுதியேற்போம். நம் திருச்சபையின் வாயிலாக நாம் அனைவரும் நிறைவான நற்பலனைப் பெற்றிட ஆண்டவர் இயேசு அருள்புரிவாராக.
நன்றி கூறுவோம்!
நீர்ப்பாய்ச்சுவோம்!
நற்பலனைப் பெறுவோம்!
கிறிஸ்துவின் திருப்பணியில்,
மேயேகோ
ஜூன் 2026
9486810915

0 Comments