Ad Code

வியாபாரிகள் ஆசீர்வாதக் கூடுகை: ஊழியமா? வியாபாரமா? Businessmen's Blessing Gathering: Ministry or Business?

விவசாயி முதல் தூய்மைப் பணியாளர் வரை அனைத்து உழைப்பாளர்களும் கடவுளின் பார்வையில் சமமானவர்களே. ஆனால், இன்றைய ஆன்மீக உலகில் தொழிலின் அடிப்படையில் பாகுபாடு காட்டி இந்த சமத்துவம் தடம் புரண்டு வருகிறது.

"வியாபாரிகள் ஆசீர்வாதக் கூடுகை" என்ற பெயரில் பிரத்யேக ஜெபக் கூட்டங்கள் நடத்தப்படுவது, சமூகத்தில் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் உள்ளவர்களை மட்டும் தனியாகக் கவரும் ஆன்மீக வியாபாரத்தின் வெளிப்பாடே ஆகும்.

பிரித்தாளும் கூடுகைகளும் வர்ணாசிரம நிழலும்
பண்டைய காலத்தில் மனிதர்களை அவர்களின் தொழிலின் அடிப்படையில் பிரித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது வர்ணாசிரம தர்மம். இன்றைக்கு ஆன்மீக அரங்குகளிலும் அத்தகைய ஒரு பிளவு மெல்ல தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

"வியாபாரிகள் ஆசீர்வாதக் கூடுகை" என்ற பெயரில் பிரத்யேக ஜெபக் கூட்டங்கள் நடத்தப்படுவது இதன் வெளிப்பாடே. தொழில் அடிப்படையில் மக்களைப் பிரித்து, ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் முன்னிலைப்படுத்துவது மறைமுகமாக மனிதர்களைத் தரம் பிரிக்கும் செயலாகவே அமைகிறது. கடவுளின் அருளும் ஆசீர்வாதமும் தொழிலின் அளவைப் பொறுத்தோ, சமூக அந்தஸ்தைப் பொறுத்தோ மாறுபடுவதில்லை எனும் போது, இந்த சிறப்பு கூடுகைகளின் பின்னணி என்ன என்ற கேள்வி எழுவது இயல்பானதே.

நிதி நோக்கம்: காணிக்கையா? ஆடம்பரத் தேவையா?
எளிய விவசாயிடம் ஆசீர்வாதக் கூடுகை  காணிக்கையாகக் கொஞ்சம் அரிசியும் காய்கறிகளும் கிடைக்கலாம்; ஒரு தூய்மைப் பணியாளரிடமோ அல்லது கட்டிடத் தொழிலாளியிடமோ பெறப்படும் காணிக்கை சில பத்துகளாகவோ நூறுகளாகவோ மட்டுமே இருக்க முடியும். ஆனால், தொழிலதிபர்களையும் முதலாளிகளையும் ஒருங்கிணைக்கும் போது அங்கு லட்சக் கணக்கிலும் கோடிகளிலும் காணிக்கை குவிகிறது.

இன்றைய நவீன ஊழியர்கள் பலர் எளிய வாழ்க்கையைத் துறந்து, பிரம்மாண்டமான ஆடம்பர வாழ்க்கையை விரும்பத் தொடங்கியுள்ளனர். அத்தகைய வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய எளிய மக்களின் சிறு காணிக்கைகள் போதுமானதாக இருப்பதில்லை. எனவே தான், மிகப்பெரிய நிதி மூலதனத்தைக் கொண்டுவரக்கூடிய "வியாபாரிகள் கூடுகை" போன்ற நிகழ்வுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆன்மீகம் எனும் புனிதமான தளத்தில், நிதி நன்மைகளே முதன்மை நோக்கமாக்கப்படும் நிலை கவலைக்குரியது.

சமத்துவத்தின் தேவை: உண்மையான ஆன்மீகப் பாதை
கடவுளின் அருள் அனைவருக்குமானது. ஆசீர்வாதம் என்பது முதலாளிகளுக்கு மட்டும் தேவைப்படும் ஒன்றல்ல; வெயிலிலும் மழையிலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கே அது மிகவும் அவசியமானது. உண்மையிலேயே உழைப்பைப் போற்றும் நோக்கம் இருந்தால்:
 * விவசாயிகள் ஆசீர்வாதக் கூடுகை
 * கட்டிடத் தொழிலாளர்கள் ஆசீர்வாதக் கூடுகை
 * மீனவர்கள் ஆசீர்வாதக் கூடுகை
 * தூய்மைப் பணியாளர்கள் ஆசீர்வாதக் கூடுகை
 * ஓட்டுநர்களுக்கான ஆசீர்வாதக் கூடுகை

என உழைக்கும் அனைத்து மக்களின் நலனுக்காகவும் முன்னுரிமை கொடுத்து கூடுகைகள் நடத்தப்பட வேண்டும். சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் உழைப்பாளர்களைக் கண்டுகொள்ளாமல், அதிக லாபம் தரும் வியாபாரிகளை மட்டும் நோக்கி ஓடுவது ஆன்மீகச் சேவையை ஒரு வர்த்தக அமைப்பாக மாற்றும் செயலாகும்.

நிறைவாக....
வியாபாரிகள் கூடுகை என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் ஆன்மீகத்தையும் ஒரு வியாபாரமாக மாற்றும் போக்கு என்பதை அடித்தட்டு மக்களும் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆன்மீகம் என்பது மனிதர்களைத் தொழில் அல்லது பணத்தின் அடிப்படையில் பிரிக்காமல், அனைவரையும் சமமாக நேசிக்க வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் இத்தகைய பிரத்யேகக் கூடுகைகளைக் கைவிட்டு, உழைக்கும் அனைத்து மனிதர்களின் வியர்வைக்கும் மதிப்பளிக்கும் உண்மையான ஆன்மீகப் பாதையை நோக்கிச் செல்வதே தற்போதைய தேவையாகும்.

Businessmen's Blessing Gathering: Ministry or Business?

From farmers to sanitation workers, all laborers are equal in the eyes of God. However, in today's spiritual world, this equality is derailed by discrimination based on occupation. Organizing exclusive prayer meetings under the name "Businessmen's Blessing Gathering" is a clear manifestation of a commercialized spirituality that targets  only the economically elite.

Divisive Gatherings and the Shadow of Varnashrama

In ancient times, the Varnashrama system divided human beings based on their occupations, creating deep social inequalities. Today, a similar division is subtly raising its head within spiritual arenas.

The organization of exclusive prayer meetings titled "Businessmen's Blessing Gathering" reflects this shift. Segregating people by occupation and highlighting a specific affluent class acts as a subtle categorization of human worth. When divine grace and blessings do not depend on the scale of a business or social status, asking about the true background of these special gatherings becomes necessary.

Financial Motives: Offerings or Luxury Needs?

Organizing a blessing gathering for a humble farmer might yield a little rice and vegetables as offerings; an offering from a sanitation worker or a construction laborer might only amount to tens or hundreds of rupees. However, when business magnates and owners gather, offerings pour in by the millions and tens of millions.
Many modern preachers have abandoned a simple lifestyle in favor of grand luxury. Small offerings from ordinary working people are no longer enough to support such lifestyles. As a result, "Businessmen's Gatherings"—events capable of generating massive financial capital—are thriving. Transforming financial gain into the primary goal within a sacred space like spirituality remains a troubling trend.

The Need for Equality: The True Spiritual Path
Divine grace belongs to everyone. Blessings are not meant solely for business owners; they are even more essential for laborers working through heat and rain. If the goal were truly to honor labor, priority would be given to organizing gatherings such as:
 * Farmers' Blessing Gathering
 * Construction Workers' Blessing Gathering
 * Fishermen's Blessing Gathering
 * Sanitation Workers' Blessing Gathering
 * Drivers' Blessing Gathering
Spiritual platforms should prioritize the welfare of all working people. Ignoring marginalized laborers in society to chase high-profit business owners turns spiritual service into a commercial entity.

Conclusion
Everyday people easily understand that events conducted under the name "Businessmen's Gathering" represent a trend toward turning ministry into a business. Spirituality must love everyone equally, without dividing people by occupation or wealth. Abandoning these exclusive, divisive gatherings and moving toward a genuine spiritual path that values the sweat of every laboring human being is the true need of the hour.


Post a Comment

0 Comments