Ad Code

கர்த்தருடைய ஊழியத்தை? எப்படி செய்யக்கூடாது? How not to do Ministry?



1. வீம்புக்காக செய்யாதிருங்கள்!

பிலிப்பியர் 2:3 - "ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்."

2. விளையாட்டாக செய்யாதிருங்கள்!

கலாத்தியர் 6:7 - "மோசம்போகாதிருங்கள், தேவன் பரியாசம்பண்ணப்படார்."

1 கொரிந்தியர் 10:31 - "எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்."

3. வேண்டா வெறுப்பாக செய்யாதிருங்கள்!

2 கொரிந்தியர் 9:7 - "விசனத்தோடே அல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்."

4. விளம்பரத்துக்காக செய்யாதிருங்கள்!

மத்தேயு 6:1 - "மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்."

5. கடமைக்காக செய்யாதிருங்கள்! [அன்பில்லாமல்]

1 கொரிந்தியர் 13:3 - "அன்பு எனக்கிராவிட்டால் அதனால் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை."

வெளிப்படுத்தல் 2:4 - "ஆதியில் கொண்டிருந்த அன்பை நீ விட்டாய்."

6. கட்டாயத்திற்காக செய்யாதிருங்கள்!

1 பேதுரு 5:2 - "உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும் கண்காணிப்புச் செய்யுங்கள்."

7. பாராட்டுக்காக செய்யாதிருங்கள்!

யோவான் 12:43 - "தேவனால் வருகிற மகிமையைப்பார்க்கிலும் மனுஷரால் வருகிற மகிமையை விரும்பினார்கள்."

மத்தேயு 6:5 - மனுஷர் காண வேண்டுமென்று ஜெபம் பண்ணுகிற மாயக்காரரைப்போல் இருக்க வேண்டாம்.

8. பார்வைக்காக செய்யாதிருங்கள்!

கொலோசெயர் 3:23 - "மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல் கர்த்தருக்கென்றே நல்மனதோடே செய்யுங்கள்."

எபேசியர் 6:6 - "பார்வைக்கு ஊழியஞ்செய்கிறவர்களாய் மனுஷருக்குப் பிரியப்படுகிறவர்களாயிராமல்..."

9. பதவிக்காக செய்யாதிருங்கள்!

மத்தேயு 23:11 - "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்."

3 யோவான் 1:9 - தியோத்திரேப்பு முதன்மையாயிருக்க விரும்பினான்.

10. பெருமைக்காக செய்யாதிருங்கள்!

நீதிமொழிகள் 16:18 - "அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை."

யாக்கோபு 4:6 - "பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்."

11. ஆதாயத்துக்காக செய்யாதிருங்கள்!

1 தீமோத்தேயு 6:5 - "தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிறவர்கள்."

தீத்து 1:11 - "இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசிக்கிறார்கள்."

12. அரைகுறையாக செய்யாதிருங்கள்!

பிரசங்கி 9:10 - "செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்."

வெளிப்படுத்தல் 3:16 - "நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயின்று வாந்திபண்ணிப்போடுவேன்."

13. அக்கிரமத்தோடு செய்யாதிருங்கள்!

சங்கீதம் 50:16 - "துன்மார்க்கனைப்பார்த்து தேவன் சொல்லுகிறது என்னவென்றால், நீ என் பிரமாணங்களை எடுத்துச் சொல்லவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும் உனக்கு என்ன நியாயமுண்டு?"

2 தீமோத்தேயு 2:19 - "கர்த்தருடைய நாமத்தைச் சொல்லுகிறவனெவனும் அநியாயத்தை விட்டு விலகக்கடவன்."

14. ஏதாவது எதிர்பார்த்து செய்யாதிருங்கள்!

1 கொரிந்தியர் 15:58 - "கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் வீணாயிராதென்று அறிந்து..."

லூக்கா 6:35 - "பலனை எதிர்பாராமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்."

15. உயர்வுக்காக செய்யாதிருங்கள்!

லூக்கா 14:11 - "தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்."

மத்தேயு 23:12

16. உதாசீனத்தோடு செய்யாதிருங்கள்!

எரேமியா 48:10 - "கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்."

கலாத்தியர் 6:9 - "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக."

மொத்தத்தில், ஊழியம் என்பது தேவனுக்காக, மனப்பூர்வமாக, அன்போடும் உண்மையோடும் செய்யப்பட வேண்டும் என்பதே!


Post a Comment

0 Comments